NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நகைகள், தங்க பிஸ்கட்களுடன் ஐவர் கைது!

டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை கொண்டு வந்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (27) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் டுபாயில் இருந்து இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் கொண்டுவந்த பொருட்களின்  பெறுமதி சுமார் 12 கோடியே 30 இலட்சம் ரூபா என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன் அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் வர்த்தகர்கள் குழுவாகும்.

06 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை அவர்கள் உடலிலும், கொண்டு வந்த கைப்பைகளிலும் மறைத்து வைத்திருந்த போது சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles