கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலின்படி இந்த தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து குறித்த புலனாய்வு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை பொலிஸார், விமானப்படை மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்தனர்