ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவர் சார்பில் இன்று காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் குழுவினர் சென்று பிணைப் பணத்தை வைப்பிலிட்டனர்.
முன்னதாக எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இதன்படி, ஓகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும், 15ஆம் திகதி முதல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சுயேட்சை பேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க, முதல் ஆளாக கட்டுப்பணம் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.