NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கணவர் நல்லவர் என்பதால் விவாகரத்து செய்த பிரபலம்!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபலமான கால்பந்து வீரர் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சாண்டோஸ். இவர் அனைவராலும் அன்போடு ‘காகா’ என அழைக்கப்படுகிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டிலிந்து கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வுபெற்றார் ரிக்கார்டோ.

இந்நிலையில் 2005 ஆண்டு அவரது சிறுவயது தோழியும் காதலியுமான கரோலின் சிலிகோவை திருமணம் செய்து கொண்டார்.

சுமார் பத்து வருடங்களின் பின்னர் 2015ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இதற்குப் பின்னர், ரிக்கார்டோ மற்றும் கரோலின் இருவரும் அவர்களுக்கு ஏற்றவர்களை மறுமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், விவாகரத்து குறித்து ரிக்கார்டோவின் முதல் மனைவியான கரோலினிடம் கேட்ட போது,

‘காகா ஒருபோதும் எனக்கு துரோகம் செய்ததில்லை. அவர் என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டார். சிறந்த குடும்பத்தை எனக்கு பரிசாகக் கொடுத்தார். ஆனால், எனக்கு அதிலும் மகிழ்ச்சியில்லை. ஏதோ ஒன்று குறையாகவே இருந்தது. காரணம், எனது கணவர் மிகவும் சரியானவராக இருந்தார். அந்த காரணத்தினால்தான் நான் அவரை விவாகரத்து செய்தேன்’ என அவர் விவாகரத்துக்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

பொதுவாக கணவர் கெட்டவர் அல்லது மனைவி கெட்டவர் என்றால்தான் விவாகரத்துக்கள் நடக்கும். ஆனால், கணவர் மிகவும் நல்லவராக இருந்தமையால் விவாகரத்து நிகழ்ந்துள்ளமை வித்தியாசமாக இருக்கிறது.

Share:

Related Articles