NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலைக்கு தொடர்புடைய இஷாரா போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது..!

உலக பாதாள குழு கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலைக்கு தொடர்புடையவராகவும் தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண் அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.


இதன்போது அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த பெண்ணொருவருடன் போதைப்பொருள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்ஜீவ குமார சமரரத்ன என அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி குறித்து துல்லியமான தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.


தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி இலக்கங்கள்:
பணிப்பாளர்இ கொழும்பு குற்றப்பிரிவு – 071-8591727


நிலைய பொறுப்பதிகாரிஇ கொழும்பு குற்றப்பிரிவு – 071-8591735


மேலும்இ தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த கொலை தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles