லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியில், பி-லவ் கண்டி அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பி-லவ் கண்டி அணி, நாளை நடைபெறும் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், தம்புள்ளை ஓரா அணியை எதிர்கொள்ளவுள்ளது.
கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பி-லவ் கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பி-லவ் கண்டி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 48 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 38 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.
காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், சொனால் தினுஷ மற்றும் லஹிர குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய காலி டைடன்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், பி-லவ் கண்டி அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சொனால் தினுஷ 28 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க, மொஹமட் ஹஸ்னெய்ன் மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா விக்கெட்டுகளையும் முஜிப் உர் ரஹ்மான் மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.