கண்டி எசல பெரஹரா உற்சவம் நான்கு பிரதான விகாரைகளில் மங்களகரமான ‘கப்’ நடும் நிகழ்வுடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று அதிகாலை 4.10 மணிக்கு நாத, விஷ்ணு, கதிர்காமம், பத்தினி ஆகிய நான்கு முக்கிய விகாரைகளில் கப் (Kap) கட்டும் நிகழ்வு நடைபெற்றது.
விகாரைகளில் ஐந்து பெரஹராக்கள் நிறைவடைந்ததன் பின்னர் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் பெரஹரா வீதி உலா வரவுள்ளது.
அதன்படி, ரந்தோலி பெரஹெரா ஆகஸ்ட் 15 அன்று ஆரம்பமாகவுள்ளதோடு இறுதி ரந்தோலி மகா பெரஹெரா ஆகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.