நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்வில்லை சத்திர சிகிச்சையின் பின்னர் சிக்கல்களை எதிர்கொண்ட 17 பேருக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
இதற்கான பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த மருந்துகளை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.