NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கதிரையில் அமர்ந்திருந்த நபர் திடீரென உயிரிழப்பு…!

அனுராதபுரத்தில் கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு நகரிலிருந்த தேவையின் நிமித்தம் அங்கு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் அந்தப் பகுதியில் சைக்கிளை நிறுத்திவிட்டு கதிரையில் அமர்ந்திருந்த வேளையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரமாக கதிரையில் அமைதியாக இருந்துள்ளமையால் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் எண்ணியுள்ளனர்.

எனினும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அருகில் சென்று பரிசோதித்த போது அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Related Articles