கதிர்காமம் நகரில் யாத்திரிகர்களை துன்புறுத்திய 22 பேரை கைது செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவில் இரண்டு பெண்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
மதுபோதையில் ஊருக்குள் சுற்றித் திரிவது, பக்தர்களை அநாகரீகமாக பேசி மிரட்டுவது, பூஜை பானைகளை வலுக்கட்டாயமாக விற்பது, பூஜை பானைகளை எடுக்காவிட்டால் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தவிடாமல் செய்வது, கஞ்சா சுருட்டு வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்த குழு மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.