(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கதிர்காமம் மற்றும் லுனுகம்வெஹர பகுதிகளுக்கு அருகில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (15) இரவு 10.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2.5 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாக புவியியல் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







