கனடாவில் 200 ஆண்டுகள் பழமையான கட்டடமொன்று நூற்றுக்கணக்கான சவர்க்கார கட்டிகளை பயன்படுத்தி நகர்த்தபட்டுள்ளது.
கனடாவின் நோவா ஸ்கோசியாவில் நடந்த டிகுறித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் உலகின் பார்வையை பெற்றுள்ளது.
காரணம் 220 டன் நிறையுடைய ஒரு பாரிய கட்டடம் சவர்கார கட்டிகளின் உதவியுடன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த கட்டடத்தை இடிக்க ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. ஆனால், தனியார் நிறுவனம் ஒன்று, இந்த கட்டடத்தை புதிய இடத்திற்கு மாற்றும் திட்டத்துடன் வாங்கியது.
இதனால் கட்டடம் இடிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த கட்டுமான நிறுவனம் தற்போது முழு கட்டடத்தையும் நகர்த்திய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கட்டடம் மிகவும் மென்மையாக இருப்பதால் உருளைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இரும்புச் சட்டத்தை ஏற்ற ஐவரி சவர்காரத்தை(ivory soap) பயன்படுத்த முடிவு செய்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.
கட்டடம் 30 அடி தூரத்திற்கு மாற்றப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.