NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடா படுகொலை – இறுதி கிரியை தொடர்பான அறிவித்தல்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு பேரின் இறுதிகிரியைகள் ஞாயிற்க்கிழமை ஓட்டவாவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை கனடா பௌத்த சங்கம் ஒன்று வெளியிட்டுள்ளது. சர்வ மத வழிபாட்டையடுத்து நல்லடக்கம் இடம்பெறவுள்ளது.

உறவினர்களின் விருப்பத்திற்கு அமைய கனடாவில் அவர்களின் பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நான்கு சிறுவர்கள் உட்பட தாய் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கடந்த வாரம் 19 வயதுடைய டி சொய்ஸா என்ற இளைஞனினால் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கொலை குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பான விசாரணைகளில் குறித்த இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குடும்பஸ்தர் நலமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை தொடர்பான விசாரணைகளை கனடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles