முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகளும் நேற்று (09) காலை முதல் 6 அங்குல அளவில் திறந்துவிடப்பட்டிருந்ததோடு, நீர் வரத்து அதிகரித்த நிலையில் இன்று (10) 4 வான்கதவுகளும் ஒரு அடி 3 அங்குல அளவில் திறந்துவிடப்பட்டுள்ளன.
இதேபோன்று தண்ணிமுறிப்பு குளத்தின் 3 வான் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ன.
இதேவேளை, தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில் தாழ்நிலை பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே தொடர்ச்சியாக மழை பெய்கின்ற போது இன்னும் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்பதால், தாழ்நிலப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.