கனடா நாட்டவர்களுக்கு இ-விசா (மின்னணு) சேவைகளை மீண்டும் வழங்க இந்தியா முடிவு எடுத்திருப்பதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த செப்டம்பரில் இந்தியா மற்றும் கனடாவுக்கும் இடையே காலிஸ்தான் தீவிரவாதியின் கொலையை தொடர்ந்து ஏற்ப்பட்ட இராஜதந்திர முரண்பாடுகள் காரணமாக கனடா நாட்டு மக்களுக்ளுக்கான விசா சேவையை செப்டம்பர் 21 அன்று இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில்இ இந்திய வெளியுறவு அமைச்சு கனடா குடிமக்களுக்கான மின்னணு விசா சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்திய பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையிலான சந்திப்புக்கு முன்னர் இந்த விசா வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.