இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்டறியும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
செயற்கைகோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கடல்பரப்புக்குள் பிரவேசிக்கும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன.
இந்த நிலைமையானது இலங்கையின் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சுழல் அமைப்பை கடுமையாக பாதித்தது.
இந்த நிலையிலே, நிலைமைகளை கண்காணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.