(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கயானா நாட்டில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 சிறுவர்கள் பலியாகினர்.
கயானாவில் உள்ள மேல்நிலைப் பாடசாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (22) தீ பரவிய நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக தீயை கட்டுப்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் 18 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கயானா நாட்டுக்கு 3 நாட்கள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.