NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கயிற்றின் மீது கத்தி வித்தைக் காட்டி சாதனை படைத்த சர்க்கஸ் கலைஞர்…!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே பகுதியை சேர்ந்த சர்க்கஸ் கலைஞரான எட்கர் யுட்கேவிச் கயிற்றில் நடந்தவாறு 3 கத்திகளை பயன்படுத்தி நேர்த்தியாக வித்தை காட்டி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளது. அதில், குறிப்பிட்ட உயரம் கட்டப்பட்ட கயிற்றின் மீது எட்கர் யுட்கேவிச் நடந்து செல்கிறார். அப்போது அவரது கையில் 3 கத்திகளை வைத்து அவற்றை வீசி வித்தை காட்டி பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.

இவ்வாறு வித்தை காட்டியவாறு 34 அடி மற்றும் 4 அங்குல தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்

Share:

Related Articles