கராப்பிட்டிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது
கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் ஆரம்பித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வைத்தியரை மஹரகம வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.