(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
புற்றுநோய் தடுப்பு மருந்தை நோயாளர்களுக்கு வழங்கியதன் பின்னர் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக அதன் பாவனை திரும்ப பெறப்பட்டுள்ளதாக, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய குறித்த மருந்தை முன்னர் கறுப்புப் பட்டியலில் சேர்த்த நிறுவனமே அதே மருந்தை இறக்குமதி செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2250 புற்றுநோய் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த மருந்துகளை இறக்குமதி செய்த நிறுவனம் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் உத்தியோகபூர்வ முத்திரையுடன் போலி ஆவணத்தை தயாரித்துள்ளதாகவும், இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.