கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பலியானவர் 36 வயதுடைய கல்கிஸ்சை வட்டரப்பல பகுதியைச் சேர்ந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உந்துருளியில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.