NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் 30 வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரச அச்சக கூட்டுத்தாபனம் 125 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாகவும், தேவையான அளவு புத்தக அச்சிடுவதற்கு கூட்டுத்தாபனம் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது தாள்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Share:

Related Articles