நாங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவினால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பிரதிபலனை கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு வரலாற்றில் முதல் தடவையாக 2025 ஆம் ஆண்டு வரவு, செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், பொருட்கள்றும் சேவைகள் எவ்வித தடையுமின்றியும் சாதாரண விலையிலும் பொது மக்களுக்கு கிடைக்கும் வகையில் செயற்படுவதே எங்களுடைய அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்
பொருளாதாரத்தை பொது மக்கள் தங்கு தடையின்றி அனுபவிக்கும் சூழலை உருவாக்குவதே எங்களுடைய முதற்கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நிதி அமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் குறிப்பிட்டுள்ளார்.