NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

களனி கங்கைக்குள் தவறி விழுந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்!

கொழும்பு – பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் களனி கங்கையில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு விக்டோரியா பாலத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது கையடக்கத்தொலைபேசி மற்றும் நாராஹென்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவது தொடர்பான ஆவணங்கள் என்பன பாலத்திற்கு அருகில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காணாமல்போனவரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Share:

Related Articles