NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

களுத்துறை சிறுமி உயிரிழப்பு சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

களுத்துறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விடுதி உரிமையாளரின் மனைவியை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க களுத்துறை நீதவான் நிதா ஹேமமாலி ஹல்பண்தெனிய உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தோழி, தோழியின் காதலன் மற்றும் பிரதான சந்தேகநபரின் காரை எடுத்துச் சென்ற நபர் ஆகியோரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி இறக்கும் போது விடுதியில் தங்கியிருந்த பிரதான சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles