NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

களுத்துறை மாணவி உயிரிழப்பு சம்பவம் – சந்தேகநபர்கள் மீண்டும் நீதிமன்றில்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் மற்றும் உயிரிழந்த மாணவியின் தோழி, அவரது காதலன் மற்றும் பிரதான சந்தேகநபரின் சாரதி ஆகியோர் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், பாடசாலை மாணவிகள் பலரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதவி வகுப்பு ஆசிரியரும், களுத்துறை – பயாகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பதினொரு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விஹாராதிபதி மற்றும் இரண்டு பிக்குகளும் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாலுறவு சுகாதார கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles