NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

களுத்துறை மாணவி சம்பவத்துடன் தொடர்புடையவர் ‘அரகலய’ போராட்டத்தின் தலைவர் – ரோஹித MP

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

களுத்துறையில் இடம்பெற்ற 16 வயது மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்ற நபர் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற ‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் தலைவர் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணசேகர நேற்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உண்மையான தகவல்கள் எங்களுக்குத் தெரியாது. எவ்வாறாயினும், இந்த வழக்கில் சந்தேகநபர் களுத்துறை மாவட்ட அரகலய தலைவர் என தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

போராட்டத்தை தொடங்கிய ஏனையவர்கள் பழிவாங்கலுக்கு ஆளாகியுள்ளனர். சடங்குகளில் ஈடுபட்டிருந்த ‘கட்டடியா’ என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். ஒருவர் புகையிரதத்தில் விழுந்தும், மற்றொருவர் வைத்தியசாலையில் இருந்த நிலையிலும் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துகோரல சிறையில் மரணமடைந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் தற்போதைய பிறவியிலேயே பழிவாங்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் சிரமப்பட்டனர். கஷ்டப்பட்டதால் வீதிக்கு வந்தனர். இருப்பினும், உண்மையான பிரச்சினை என்னவென்றால், சிலர் இந்த சூழ்நிலையை தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பயன்படுத்தினர்.

கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி அன்று 871 சம்பவங்கள் பதிவான நிலையில், 115 எம்.பி.க்கள் பாதிக்கப்பட்டனர். போராட்டத்திற்கு நிதி எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்வது முக்கியம் என்றும் ரோஹித அபேகுணசேகர எம்.பி சபையில் வலியுறுத்தினார்.

Share:

Related Articles