(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பிரபல சர்வதேச உணவு நிறுவனமொன்று வெள்ளவத்தையில் கடற்கரையில் தனது நிறுவனத்தின் கழிவுப்பொருட்களை வீசியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அவற்றை காண்பிக்கும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
சமூக அரசியல் ஆய்வாளர் பிரசாத்வெலிகும்பர இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில், மக்கள் நீராடுவதற்காக பயன்படுத்தும் ஒரே கடற்கரை வெள்ளவத்தை எனவும் கடந்த சனிக்கிழமை தானும் தனது குழுவினரும் இணைந்து அந்த இடத்தை துப்புரவு செய்திருந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.