NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காங்கேசன்துறை – நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட இருப்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ‘இந்த்ஶ்ரீ கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின்’ (IndSri Ferry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் சேவையை மேற்கொள்ள பூர்வாங்க அனுமதிகள் இலங்கை – இந்தியா அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன.

இதற்காக இந்திய கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் தமது நிறுவனத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு வந்து சேரும் என சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில் 150 பயணிகள் தலா 60 கிலோ பொதிகளுடன் (check in baggage) பயணிக்கலாம். ஒரு வழிப் பயணக் கட்டணமாக இந்திய ரூபாவில் 4,250 மற்றும் வரிகளும் அறவிடப்படும்.

Share:

Related Articles