NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காங்கேசன்துறை – நாகப்பட்டிணம் கப்பல் சேவை இன்று இரத்து…!

இந்தியா – இலங்கைக்கு இடையேயான செரியாபாணி கப்பல் போக்குவரத்து சேவையின் இன்றைய பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

போதியளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால் இன்றைய பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், செரியாபாணி கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் – காங்கேசன்துறை துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து 50 பேரும், காங்கேசன்துறையிலிருந்து 30 பேரும் கப்பலில் பயணம் செய்தனர்.

இந்நிலையில்,  இன்று போதிய அளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தற்பொழுது கப்பல் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

Share:

Related Articles