காசாவில் இரு தரப்பினரும், பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் தலைவர் வொல்கர் டேர்க் தெரிவித்துள்ளார்.
சாதாரண பொது மக்களை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளை இஸ்ரேலும் ஹமாசும் உடனடியாக நிறுத்தி சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு காசாவின் சில பகுதிகளிலும் நாளாந்தம் நான்கு மணி நேரத்திற்கு இராணுவ நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.