NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காசாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி !

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,320 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த 7 ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர்.

அத்துடன் பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகின்றது. இதனால் இரு பக்கமும் பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை 8,119 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,320 குழந்தைகள் உள்ளடங்குவர். 20,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles