17ஆவது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் பலஸ்தீன ஜிகாத் அமைப்புகளின் கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்படி, பயிற்சி மையங்கள், சுரங்க பாதைகள், தலைமை இடங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதேபோன்று காசா எல்லையில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து, காசா நகருக்குள் செல்லும் நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனங்களை இஸ்ரேல் படைகள் பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் தீவிரமடைய கூடும் என்ற நிலையில், இலட்சக்கணக்கான இஸ்ரேல் மக்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர்.