பாலஸ்தீனியர்கள் நிலம் வழியாக வேறு இடங்களுக்கு வெளியேறி செல்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனியர்கள் காசாவுக்கு என்றேனும் ஒரு நாள் திரும்பி வருவது பற்றி எதுவும் கூறப்படாத நிலையில், காசாவை அமெரிக்கா மறுகட்டமைப்பு செய்து காசாவிலுள்ள மக்கள் உலகின் பிற நாடுகளில் நிரந்தர குடியமர்த்தப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் பாலஸ்தீனியர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் பலரால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாலஸ்தீனியர்கள் நிலம் வழியாக வேறு இடங்களுக்கு வெளியேறி செல்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி, பாலஸ்தீனியர்கள் கடல் மற்றும் வான் வழியாகவும் வெளியேறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக திட்டங்களை வகுக்கும்படி இஸ்ரேல் இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காசாவில் இருந்து பெருமளவிலான மக்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தை வரவேற்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.