NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சுமார் 15 அடி உயர்ந்துள்ளது.

மழையுடன் நீர் மட்டம் மொத்தமாக 122 அடியாக உயர்ந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசல் ரீ நீர்த்தேக்கத்தின் அணையின் உயரம் 155 அடி எனவும், அதன் நீர் கொள்ளளவை உபரிநீர் மட்டத்திற்கு கொண்டு வர மேலும் 33 அடி நீர் கொள்ளளவு தேவை எனவும் நீர்த்தேக்கத்திற்கு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மழை பெய்யாதமையால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

Share:

Related Articles