காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்காக காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கை அநுராதபுரம் – மஹவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதியில் காட்டு யானைகளின் ஆபத்தை எதிர் நோக்கும் கிராம சேவகர் பிரிவுகள் சிலவற்றில் 12 காவலரண்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவை சமூக மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படவுள்ளன.
காவலரண்களின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் உடனடியாக அங்கு சிவில் பாதுகாப்புப் படையினரைக் கடமையில் ஈடுபடுத்தி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.