NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டுபிடிப்பு…!

ஜா-எல பகுதியில் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை கைது செய்ய தானும் கால்வாயில் குதித்த போது காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீர்கொழும்பு களப்புவுக்கு அருகில் பமுனுகம, சேதவத்த பிரதேசத்தில்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜா-எல பகுதியில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்ற போது, ​​சந்தேகநபர் கால்வாயில் குதித்து தப்பியோட முயற்சித்துள்ளதுடன், அவரை பிடிக்க 4 பொலிஸ் அதிகாரிகள் கால்வாயில் குதித்துள்ளனர்.

அதில் ஒரு அதிகாரியே இவ்வாறு காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles