NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதல் விவகாரத்தால் தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன் – கம்பஹாவில் சம்பவம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தங்கையின் காதல் விவகாரம் காரணமாக அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அண்ணன் படுகொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கம்பஹா – பியகம பிரதேசத்தில் நேற்று (01) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியகமவைச் சேர்ந்த 18 வயது உயர்தர வகுப்பு மாணவி, அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ள நிலையில், அவரின் வீட்டாருக்கு இந்த விடயம் தெரியவந்ததை தொடர்ந்து, மூத்த சகோதரன், தங்கையுடன் நேற்றுமுன்தினம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை அடித்தும் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த மூத்த சகோதரன் தங்கையுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கத்தியால் தாக்கியுள்ளார்.

குடும்பத்தினர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் 25 வயதுடைய மூத்த சகோதரனையும், காதலனான 23 வயதுடைய இளைஞரையும் கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேலதிக மேற்கொண்டு முன்னெடுததுள்ளனர்.

Share:

Related Articles