NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காயத்துக்கு பசையிட்டு வைத்தியம் செய்த வைத்தியர் கைது – இந்தியாவில் சம்பவம்!

இந்தியா – தெலுங்கானா மாநிலம், கதவ்வால் மாவட்டத்தில் உள்ள அய்சா பகுதியில் சிறுவனுக்கு நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு தையலுக்குப் பதிலாக பசையை பூசிய வைத்தியரை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோருடன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக அய்சா என்ற ஊருக்கு சென்றிருந்த வேளை, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததினால் இடது கண்ணின் ஓரம் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் அவரை அருகில் இருந்த வைத்தியசாலையில் கொண்டு சென்ற போது, தையல் போடுவதற்கு பதிலாக Fevicol என்ற பசையை காயத்துக்குப் போட்டு ஒட்டியுள்ளனர். விவரம் அறிந்த பெற்றோர் வைத்தியசாலை அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் குறித்த வைத்தியசாலைக்கு சென்று ஆய்வு செய்ததுடன், வைத்தியசாலைக்கு சீல் வைத்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles