NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலிமுகத்திடல் அமைக்கப்பட்டுள்ள அதிசொகுசு அடுக்குமாடி கட்டடத்தை திற்ந்து வைத்தார் ஜனாதிபதி!

கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப  அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த திட்டத்திற்கு சுமார் 3,000 கோடி இந்திய ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில்,

முதல் கட்டடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும்,

இரண்டாவது கட்டடம் 50 அடுக்குமாடி குடியிருப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் வகையில் 55 மீற்றர் நீளமான ஸ்கை ப்ரிட்ஜ் எனப்படும் வான்  பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சம் என தெரிவிக்கப்படுகின்றது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles