NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலி முகத்திடலில் யாசகர்களால் ஏற்படும் சிரமங்களை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

காலி முகத்திடலில் யாசகர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு துறைமுகமும் பொலிஸார் இணைந்து கூட்டு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது காலி முகத்திடலில் சுமார் 150 பேர் கொண்ட யாசகர்கள் யாசகம் எடுப்பதால் அங்கு வருகைதரும் மக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு தீர்வாக, யாசகர்களை ஹம்பாந்தோட்டை, ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை அவர்களின் பணியிடத்தின் போது தேவையான தங்குமிடங்களையும் உணவையும் வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles