NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலி முகத்திடலில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்!

காலி முகத்திடல் பகுதியை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபையானது காலி துறைமுகத்தை சமூக பொறுப்புணர்வு திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக சுமார் 220 மில்லியன் ரூபாவை அதிகார சபை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த போராட்ட காலத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்வதற்கு மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடலை பொதுமக்களுக்கு இலவச நேரத்துக்கும் விசேட சமய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதன்படி, காலி முகத்திடலின் அழகைக் கெடுக்கும் அல்லது சேதப்படுத்தும் வகையிலான இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகள் இனிமேல் அப்பகுதியில் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles