(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கால்நடைகளுக்கு பரவும் தோல் கழலை நோய் மத்திய மாகாணத்தில் பால் உற்பத்தியை பாதித்துள்ளதாக, மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் பல பிரதேசங்களில் மாட்டு தோல் கழலை நோய் பதிவாகியுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதன் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.எம்.கே.பி.ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.