காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபடுவதாக இஸ்ரேல் மீது சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான எம்னஸ்டி இன்டர்நேஷனல் (AMNESTY INTERNATIONAL) குற்றஞ்சாட்டியுள்ளது.
காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் இன அழிப்பில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஏக்னிஸ் கலாமர்ட் (AGNES CALLAMARD) தெரிவித்துள்ளார்.
இது சர்வதேச சமுதாயத்துக்கு ஓர் எச்சரிக்கை எனவும், இந்த இன இழிப்பு இப்போதே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்பதுடன், காஸாவில் பொதுமக்களிடையே ஆயுதக் குழுவினர் கலந்திருப்பதையும் மறுக்க முடியாது எனவும், குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த பகுதியில் இஸ்ரேல் நடத்திவருவது இன அழிப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் குற்றத்துக்கு அமெரிக்காவும் இஸ்ரேலின் பிற நட்பு நாடுகளும் துணை போவதாகவும் அவர் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தப் போரின் தொடக்கம் முதலே இன அழிப்புக் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.