NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காஸாவில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் – 20 பேர் உயிரிழப்பு..!

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கிடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியிலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றது.

இந்த மோதல்களில் இரு தரப்பிலும் சுமார் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு, 100 இற்கும் அதிகமானோர் பணயக் கைதிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகருக்கருகில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பாடசாலையில் போரினால் வீடுகளை இழந்த பாலஸ்தீன மக்கள் முகாமிட்டு தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், அது ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண முகமை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles