13வது கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டிகள் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டிகளில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக போட்டிகளில் பங்கேற்கவுள்ளதுடன் மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெறும்.
இதில் வெற்றி பெறும் 2 அணிகள் உலக கோப்பையில் விளையாட தகுதி பெறவுள்ளன.
குறித்த போட்டி அட்டவணைகளும் தற்போது வெளியாகியுள்ளன.

