NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு..!

கிளிநொச்சியின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு
இடம்பெறறு வருகிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தொடரும் சட்டவிரோத மணல்  அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள்
உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இரவு நேரங்களில்
விவசாய காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றனர் என்றும்
இதன் காரணமாக தங்களது  விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுளளது
என்றும் கவலை தெரிவித்துள்ள பொது மக்கள் .

 சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கும்  பொலீஸாருக்கும்
இடையே நெருங்கிய உறவு இருப்பதனால் அவர்கள் மீது பொலீஸார் எவ்வித
நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பினை தடுக்கவும், விவசாய நிலங்களை
பாதுகாக்கவும் சட்டவிரோத மணல் அகழ்வோர்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

Related Articles