NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளிநொச்சி தொண்டமான்நகர்  வெள்ள வாய்காலால் வீடுகளுக்கு ஆபத்து.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொண்டமான்நகர் கிராம
அலுவலர் பிரிவில் காணப்படுகின்ற வெள்ள வாய்க்கால்  மழைக்காலங்களில்
பாய்ந்தோடும் வெள்ளம் காரணமாக பல வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என
பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில்  வாய்க்காலில் பெருக்கெடுக்கும்
வெள்ளம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள பல வீடுகளின்
அத்திபாரம் பாதிக்கப்படும் அளவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு சில
வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளை பாதுகாத்துக்கொள்ள மண்மூடைகளை
தற்காலிகமாக அடுக்கி வைத்துள்ள போதும் பாதிப்பை தடுக்க முடியவில்லை
என்றும் மலசல கூடங்கள் கூட வெள்ளத்தால் அரிக்கப்பட்டு இடிந்துவிழும்
நிலையில் இப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக குறித்த வெள்ள வாய்கால் காரணமாக தாம் பாதிக்கப்படுவதாகவும்
வாய்க்காலின் குறிப்பிட்ட சிறிய பகுதி கட்டப்பட்டுள்ள போதும் ஏனைய
பகுதிகள்  கட்டப்படாது இருப்பதன் காரணமாக  வீடுகளுக்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ நிலையம், கரைச்சி பிரதேச சபை என்பன குறித்த
விடயத்தில் கவனம் செலுத்தி  உரி ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்  கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles