நாட்டில் தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பற்றாக்குறை காரணமாக, வணிகர்கள் இரண்டு வகையான அரிசியையும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ள நிலைமை ஏற்;பட்டுள்ளது
அதன்படி அரிசி விலை உயர்வை அடிப்படையாகக் கொண்டு, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தினால், மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்