தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கான கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
குறித்த கூட்டத்தின்போது, கட்சியின் தலைவர் விஜய், நேர்காணல் செய்து 120 நிர்வாகிகளைத் தெரிவுசெய்ததுடன், 19 மாவட்ட நிர்வாகிகளுக்கு நியமனம் வழங்கினார்.
அதனை தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வெள்ளி நாணயத்தையும் வழங்கி வைத்தார்.
அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் விஜய்யின் முகம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், தமிழக வெற்றிக் கழகம் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, இந்த ஆண்டுக்கான குடியரசுதின அரச தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.